ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஹெலிக்கொப்டர் சிறிதளவு சேதம் அடைந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விபத்தினால் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புக்களே ஏற்படவில்லை என, விமானப் படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பில் தற்போது விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.