சம்பந்தனின் அலுவலகம் முன் கட்சித் தலைவர்கள் சத்தியாக்கிரகம்

இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு இன்று (27) நடைபெற்றது.

pikku

இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியானவர் இல்லை, இவர் உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்” என ஆக்ரோசமாக தெரிவித்தார்கள்.

கடந்த 16ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர், பரவிப்பாஞ்சானில் உள்ள கஜபா படைப்பிரிவின் தலைமையக இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளனர் எனவும், இதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினார்கள்.

தற்போது நாட்டில் தமிழ் மக்கள் எந்த இடையூறுகளும் இன்றி நிம்மதியாக வாழுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த சுதந்திரமும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக குற்றம் சுமத்துகின்றார்கள்.

இதில் சரத் மனமேந்திர, பத்தரமுல்லே சீலரத்தின தேரர் உட்பட மேலும் முக்கியமான ஏழு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts