மே தின பேரணிக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம்

மே தின பேரணிக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

போக்குவரத்துக்களுக்காக அரச பஸ்களை பயன்படுத்துவதாயின் அதற்கான பணத்தை செலுத்தி பெற்றுக்கொண்டு உரிய ரசீதை பஸ்ஸின் முன்புறத்தில் ஒட்டுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts