பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேடுகளை நாளை 24 ஆம் திகதி முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இந்த கையேட்டைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பிக்கத் தேவையான சகல தகவல்களும் கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கூறியுள்ளார்.
இதன் பிரகாரம் அடுத்த வருட பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதியான மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.