சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு!!

உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிகளின் பெறுமதி சேர் வரி அதிகரிப்புத் தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மொத்த மற்றும் சில்லறைப் பொருட்களுக்கான பெறுமதி சேர் வரி அதிகரிப்பிற்கு அமைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பாக 5, 10 மற்றும் 15 ரூபாவால் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts