பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணியைக் கொள்வனவு செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள வவுச்சர் வழங்கும் முறையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2017ஆம் ஆண்டில், இந்த வவுச்சர் முறையை ரத்து செய்து, இதுவரை காலமும் இருந்துவந்தது போல், பாடசாலை ரீதியில் சீருடைக்கானத் துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.