அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் ஒன்பது பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஐந்து ஆண்களும், பெண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஆழ்கடல் கப்பல் ஒன்றின் மூலம் நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து குறித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள், கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவின் கடல்சார் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.