தமிழகத்தில் இருந்த படகு மூலம் கஞ்சா கடத்த முயன்ற ஸ்ரீலங்கா பிரஜையொருவர் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள பாம்பன் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கியூ பிரிவு பொலிஸார் நடத்திய தேடுதலின் போது 10 கிலோ கஞ்சா வைத்திருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கியூ பிரிவு பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது, குறித்த இளைஞர் மன்னார் மாவட்டம் செல்வநகரைச் சேர்ந்த 24 வயதான பிரசாந்தன் என தெரியவந்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு வருகை வந்து, வத்தலக்குண்டு முகாமிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியதாக விசாரணையின் போது அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மதுரையிலுள்ள வர்த்தகர் ஒருவரிடம் கஞ்சாவை கொள்வனவு செய்ததாகவும் அதனை படகு மூலம் ஸ்ரீலங்காவிற்கு கொண்டு செல்வவே பாம்பன் பகுதிக்கு வந்ததாகவும் பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கியூ பிரிவு பொலிஸார் குறித்த இளைஞரை பாம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.