ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு எயிட்ஸ் நோய் பரவுவதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் வருடம் அடையாளம் காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களே என, பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இவ் வருடத்தின் கடந்த 3 மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 25 தொடக்கம் 49 வயதுக்கு இடைப்பட்டவர்களே எயிட்ஸ் நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் எயிட்ஸ் நோய் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.