ஜனாதிபதிக்கும் வடக்கு முதல்வருக்குமிடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பிலும், காணி அபகரிப்புத் தொடர்பிலும், 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பிலுமே இந்தக் கலந்துரையாடல் நடைபெறவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சருக்கு கடந்த சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்காரணமாக முதலமைச்சரால் கொழும்பு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts