இந்த முறை புத்தாண்டிற்கான சுப நேரம் கணிக்கப்பட்டது அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே என்று ஜோதிடர்கள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கண்டி மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம், புத்தாண்டு சுப நேரம் குறித்து ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு கூறியதாவது,
“உண்மையில் எனக்கும் அறியக்கிடைத்தது. ஏன் மாலை வேளையில் சுப நேரம் வந்ததென்று. சிலர் எனக்கு அதை எடுக்க வேண்டாம் என்றனர். எனினும் பொதுவாக நாம் எடுத்தோம்.
அரசாங்கத்தின் தேவைக்கேற்ப மாலை வேளைக்கு சென்றுவிட்டது என்றுதான் பேசப்பட்டது. இன்றும் மேற்கு திசை நோக்கி எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு.
அது சம்பந்தமாகவும் கருத்து வேறுபாடு இருக்கின்றது. எங்களுக்கு கூறியதால் நாம் எடுத்தோம் என்றார்.”