Ad Widget

ஐபிஎல் போட்டிகளில் லட்சங்களை அள்ளும் அழகிகள்

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென சீயர் லீடர் எனப்படும் நடன அழகிகளை ஒப்பந்தம் செய்து உள்ளன. நடன் அழகிகள் தத்தமது அணியினர் ரன் குவிக்கும்போதும், அடித்து ஆடும்போதும் உற்சாகமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்கின்றனர்.

இதில் உள்ளூரை விட வெளிநாட்டு நடன அழகிகளுக்கே ஊதியம் சற்று அதிகமாக வழங்கப்படுகிறது. அணிகளை பொறுத்து இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் வேறுபடுகிறது.

ஒரு போட்டிக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை இவர்கள் ஊதியமாக பெறுகின்றனர். தவிர, அவர்களின் அணி வெற்றி பெற்றுவிட்டால் அவர்களுக்கு சம்பளம் தவிர போனஸ் கிடைக்கும்.

அதேபோல் போட்டோ சூட், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தனிப்பட்ட முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் நடன அழகிகளுக்கு இந்த சீசனில் 10 மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது, ஒரு போட்டிக்கு ரூ.12 ஆயிரம், போனஸாக ரூ. 3 ஆயிரம், மற்ற நிகழ்ச்சிகளுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதேபோல் பெங்களூர் அணியின் நடன அழகிகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.10 ஆயிரமும், மும்பை அணியின் அழகிகளுக்கு ரூ.8 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்கள் ஒரு சீசனில் குறைந்தது 14 போட்டிகளில் பங்கேற்று ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பர். சில போட்டிகளில் இந்திய நடன அழகிகளும் பங்கேற்பர். அவர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.5000- 6000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

Related Posts