ஏ – 9 வீதியில் கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.