ஆட்டோ சாரதிகளே எச்சரிக்கை..!

முச்சக்கர வண்டியொன்றில் கூடிய சத்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்துகொண்டு சென்ற சாரதிக்கு மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.

பதுளை, தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் எடுத்துகொள்ளப்பட்ட போது, முச்சக்கர வண்டி சாரதியை கடுமையாக எச்சரித்த நீதவான் மூவாயிரம் ரூபாவை அபராதமாகவும் விதித்தார்.

Related Posts