பருத்தித்துறைப்பகுதி மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மாசடைந்த நீர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நீரினை நேரடியாக பலர் பயன்படுத்துகின்ற நிலையில் அதனை பயன்படுத்தும் மக்கள் வீட்டில் வடிகட்டிய பின்னர் வடிகட்டியினுள் எஞ்சும் நீர் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் என்று குழாய்கள் மூலம் கட்டணத்திற்கு அரசினால் விநியோகிக்கப்படும் நீரானது சரியான சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படாமல் இருப்பது வடிகாலமைப்பு சபையின் மெத்தனப்போக்கினை காட்டுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளினால் மக்களை போத்தல் தண்ணீர் பாவனைக்கு இட்டுச்செல்வதற்கு மறைமுகமாக துாண்டும் செயலாக இது அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குழாய்களில் உள்ள மாசுக்களின் விளைவா அல்லது நீர் மூலத்தில் உள்ள மாசுக்களின் விளைவா என தெரியவில்லை.
அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார்களா?