சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அந்த சங்கம் கூறுகின்றது.
அதன்காரணமாக பிள்ளைகளின் கண்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு விஷேட வைத்தியர் தர்மா இருகல்பண்டார கூறியுள்ளார்.
அவ்வாறு ஏதும் அனர்த்தங்கள் நிகழ்ந்தால் வெளியில் எங்கும் வைத்தியம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறு விஷேட வைத்தியர் பினர அமரசிங்க கூறுகின்றார்.