Ad Widget

காங்கேசன்துறை கடற்பகுதியில் தென் பகுதியைச் சேர்ந்த 11 பேர் கைது

காங்கேசன்துறை கடற்பகுதியில் தென் பகுதியைச் சேர்ந்த 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று படகுகளில் பயணித்து கொண்டிருந்த போதே, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு சிறுபடகுகளும், 40 அடி நிளமான பெரிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களை மாவட்ட பிரதி நீரியல்வளத்துறை பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் பெரிய படகில் 7 பேரும் ஏனைய இரண்டு சிறு படகுகளில் இருவருமாக 11 பேர் பயணித்துள்ளனர்.

இதன்போது இவர்கள் மேல் சந்தேகம் கொண்ட கடற்படையினர், அவர்களின் தொழில் அனுமதிப்பத்திரம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, தாம் புத்தளத்தை சேர்ந்தவர்கள் எனவும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகவே வந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், படகில் சிலிண்டர்கள் மற்றும் பயணப் பைகளும் சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்டது.

இதனையடுத்து சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களை மாவட்ட நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணாவிடம் ஒப்படைத்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவே இப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் அவர்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடி அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியுள்ளதுடன், மீன்பிடி அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் பெரிய படகுக்கான பதிவு புத்தகம் இல்லாமை போன்ற காரணங்களுக்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts