ரஜினி, கமல், விஜய் உள்பட அனைத்து ஹீரோக்களுமே தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்கள், பிரஸ்மீட்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அஜித் மட்டும் தான் நடித்த எந்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை.
படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற பாலிஸியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அப்படி அவர் வராதபோதும் யாரும் அவரை வைத்து படம் பண்ண தயங்குவதில்லை. எந்த மீடியாக்களையும் சந்திக்காதபோதும் அவரைப்பற்றி எழுத யாரும் மறுப்பதில்லை. வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள்.
அதேபோல் சினிமா உலகினர் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்வ தில்லை. நான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற ஒரு வார்த்தையை சொல்லி விலகிக்கொண்டு வருகிறார். இந்தநிலையில்,
ஒரு மீடியா நபரிடத்தில், சினிமாவில் ஜெயிப்பதற்கு தான் பட்ட கஷ்டங்களை சொன்னாராம் அஜித். அப்போது, என்னைப்பொறுத்தவரை, நாம் வளரும்போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். அதேபோல் வளர்ந்தபிறகு வாயை மூடிக்கொள்ள வேண்டும். இதுதான் நற்பயனை தரும் என்று சொன்னாராம். அஜித் சாதாரணமாக இதை சொல்லியிருந்தாலும். அவர் சொன்ன இந்த வார்த்தைகளில் உலகளாவிய வெற்றியின் தத்துவமே அடங்கியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.