தற்பொழுது வடக்கு மாகாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றபோதிலும் வற்றாப்பளை அம்மன் கோவிலின் நுழைவு வாசலில் இருக்கும் கிணற்றில் நிலமட்டத்திற்கு மேல் இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழாயால் நீர் வெளியேறிய வண்ணமே உள்ளது.
இது பற்றி வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலின் நிர்வாகசபைத் தலைவர் ம.விக்கி தெரிவிக்கையில் இக்கிணற்றுக்கு அண்மையில் எந்தவொரு நீர்நிலைகளும் இல்லை. அப்படியிருந்தும் இந்த இரண்டு கிணறுகளிலும் நிலமட்டத்துக்கு மேலால் நீர் வெளியேறுவது கண்ணகி அம்மனின் புதுமை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த இரண்டுவருடங்களாக இப்படி நீர் வெளியேறிய வண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், ஆலயக் குருக்களின் கிணற்றிலும் இவ்வாறு நீர் வெளியேறியவண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.