போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பது, எந்த நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக்கூட்டத்திலேயே இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான இறுதி முடிவினை வழங்குவது தொடர்பில், சிறீலங்கா அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான குழுவொன்று மீளாய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியரான லட்சுமி மிட்டலுக்குச் சொந்தமான பிரான்சைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆர்சிமிட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவித்தல் வந்தமையும் குறிப்பிடத்தக்கது.