யுத்த காலம் போன்று படையினரின் சோதனை நடவடிக்கைகள்

படையினர் சோதனை நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொலஸஸார், முப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி மற்றும் மன்னாரில் ஆயுதங்கள், தற்கொலை குண்டு அங்கி போன்றன மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு பாதுகாப்பு படையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சந்தேகத்திற்கு இடமான நபர்களை கைது செய்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சந்கேதத்திற்கு இடமான நபர்கள் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் தொடர்பில் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts