கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ரூபா

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நேற்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் கூறினார்.

போதைப் பொருளை கடத்தி வந்த சிறிய படகு ஈரான் நாட்டிற்கு சொந்தமானது என்றும் இந்தக் கடத்தலை செய்திருக்கின்ற பிரதான சூத்திரதாரிகள் நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் தங்கியிருந்த குழுவொன்று என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட 11 வெளிநாட்டு பிரஜைகளும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரின் பொறுப்பில் இருப்பதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Related Posts