கடந்த காலங்களில் காணாமல் போனதாக கருதப்பட்டு, காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் அல்லது மூவர் மாலைதீவில் உள்ள சிறைச்சாலையில் இருப்பதாகவும், காணமற்போனோர்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
பட்டியலில் உள்ள நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் குறித்த விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவர்களில் இருவர் அல்லது மூவர் மாலைதீவு சிறையில் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாகவும், வெலிஓயாவில் காணமற்போயுள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்ட, ஒருவர் பெண்ணொருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.