அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
கடந்த மார்ச் 04ம் திகதி வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து எட்டு இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் எட்டு பேரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த 08 பேரையும் தொடர்ந்து தடுத்து வைக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரியிருந்த நிலையில், எதிர்வரும் 04ம் திகதி வரை அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.