கல்வி பொதுத் தாராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்த 8,698 மாணவ, மாணவிகள் பிரதான ஆறு பாடங்களில் சித்திபெற தவறிவிட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது பரீட்சை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் 3.18 சதவீதம் என்பதுடன் 2014ஆம் ஆண்டு 8,147 பேர் பிரதான ஆறு பாடங்களில் சித்திபெற தவறியிருந்தனர். இது 3.17 சதவீதமாகும்.