ஜனாதிபதி ”புலு ரிட்ச்” கப்பலை பார்வையிட்டார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (28) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான புலு ரிட்ச் (Blue Ridge) கப்பலை பார்வையிட்டார்.

sheep

கப்பலுக்கு வருகை தந்த ஜனாதிபதி, அமெரிக்க கடற்படையினரால் இராணுவ மரியாதைகளுடன் கௌரவமாக வரவேற்கப்பட்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே நட்புறவை வளர்க்கும் நோக்கில் புலு ரிட்ச் கப்பல் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இலங்கை வந்தடைந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

புலு ரிட்ச் கப்பலுடன் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 900 வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று இலங்கை வந்துள்ளதுடன், இவர்கள் இலங்கை கடற்படையுடன் குறுகியகால பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். கப்பலை பார்வையிட்ட ஜனாதிபதி, கப்பல் தலைவன் உட்பட பணிக்குழாத்தினருடன் சிநேகபூர்வமாக உரையாடினார். இதன்போது ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

Related Posts