திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 500 மெகாவோட்ஸ் அலகுகளை கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக, சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் என்ற விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சம்பூரில் மின்சார நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா தயாராகி வருகின்ற நிலையில் அதன் காரணமாக சுற்றாடல் பிரச்சினை ஏற்படலாம் என்று அங்குள்ள மக்கள் என்னிடம் தெரிவித்ததோடு, இந்த விடயம் தொடர்பில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சுமத்தினர் என, சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அனல் மின்சார நிலையத்துக்கு பதிலாக சூரியக்கதிர் மூலமான மின்சார உற்பத்தியை தாம் விரும்புவதாகவும் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.