குஜராத் பெண்ணான நமீதா தெலுங்கு படம் மூலம் தமிழுக்கு வந்தார். எங்கள் அண்ணா முதல் படம். விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இங்கிலீஸ்காரன், சாணக்யா, ஏய், பம்பரகண்ணாலே, ஆணை, பச்சக்குதிர, வியாபாரி, நான் அவனில்லை, உள்பட பல படங்களில் நடித்தார். நமீதா படங்கள் அனைத்திலும் அவரது கவர்ச்சிதான் பிரதானமாக காட்டப்பட்டது. நடிப்பதற்கு வாய்ப்பளித்து எந்த படமும் அமையவில்லை.
ஹார்மோன் பிரச்னை காரணமாக அவர் உடல் எடை திடீரென கூடியதால். அவரால் இனி கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று சினிமா அவரை ஓரம் கட்ட ஆரம்பித்தது. பில்லா, ஜெகன்மோகினி, இந்திரவிழா படங்களில் குண்டு உடம்புடன் நடித்து பார்த்தார் அதுவும் எடுபடவில்லை. வருடத்திற்கு 5 அல்லது 6 படகளில் நடித்து வந்த நமீதாவுக்கு 2011க்கு பிறகு படகள் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வாய்ப்பே இல்லாமல் இருந்தார். கடை திறப்பு விழா, டி.வி ஷோக்களில் கலந்து கொள்வது, சினிமா விழாக்களில் கவர்ச்சி உடையில் வந்து போஸ் கொடுப்பது, மச்சான் என்று ரசிகர்ளை அழைத்து இப்படி தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொண்டார்.
என்றாலும் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தார். அறுவை சிகிச்சை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்றி என பல வழிகளில் முயற்சி செய்து தற்போது 90 கிலோவிலிருந்து 70 கிலோவாக உடல் எடையை குறைத்திருக்கிறார்.
உடல் எடை குறைத்த பிறகுதான் பொட்டு படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்திருக்கிறது. மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது. மேலும் வாய்ப்புகளை பெறும் வகையில் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பாருங்கள் என்று ஒப்பீட்டு படங்களை வெளியிட்டுள்ளார்.