மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விபரபட்டியல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மொழிகளுமே இலங்கையின் ஆட்சி மொழிகளாகவும், தேசிய மற்றும் நிர்வாக மொழிகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் பெரும்பாலான மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விபரப்பட்டியல்கள் ஆங்கில மொழியில் மாத்திரமே இருக்கின்றன.இந்த நிலையில் அவற்றை தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் அச்சிட வேண்டும் என்று கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.