இலங்கையிலும் ஸிகா வைரஸ் பரிசோதனை!

நேற்று காலை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஸிகா வைரஸ் பரிசோதனை செய்யும் திட்டத்தினை சுகாதார அமைச்சர் வைத்தியர் பாலித மஹிபால அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஆரம்பித்துவைத்தார்.

குறிப்பாக தென் அமெரிக்காவில் ஸிகா வைரஸ் பரவிவருவதுடன் அங்கு பெரும் நெருக்கடிநிலை நிலவி வருகின்றது. இதனையடுத்து அங்கிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் ஸிகா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்களா எனவும் அப்படி அவர்கள் ஸிகா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தால் அவர்களை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது இத்திட்டம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் உள்ள சுகாதார அமைச்சு அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்தப் பரிசோதனைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், விமான நிலையம், விமான சேவைகள் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா விமானசேவை ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related Posts