இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 6.5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த படகை மறித்து சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில், 6.5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.