பிரகாஷ்ராஜ் பிற மொழிகளில் வரும் நல்ல படங்களின் உரிமத்தை வாங்கி ரீமேக் செய்வார். மராட்டிய படம் ஒன்றை வாங்கி அதனை தோனி என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
மலையாளத்தில் வெளிவந்து பெற்றி பெற்ற சால்ட் அண்ட் பெப்பர் படத்தை வாங்கி, ‘உன் சமையல் அறையில்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
இப்போது மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கிய நட்சாம்ராட் என்ற இந்திப் படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ளார்.
நட்சாம்ராட் என்பது நம்ம ஊர் வியட்நாம் வீடு, ரத்தகண்ணீர் மாதிரி மராத்தியில் புகழ்பெற்ற நாடகம். வறுமையில் வாடும் ஒரு நாடக நடிகரின் கதை. அதனை அப்படியே படமாக எடுத்துள்ளார் மஞ்ரேக்கர், இதில் நானா படேகர் நடித்துள்ளார்.
மராத்தி மற்றும் இந்தி மொழியில் வெளியாகியுள்ள இந்த படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை மும்பையில் பார்த்த பிரகாஷ்ராஜ், படம் பிடித்து ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார்.
இதனை அவர் தமிழ், மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கிறார். நானா படேகர் நடித்த கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். தமிழில் ராஜபார்ட் ரங்கத்துரை என்ற சிவாஜி பட டைட்டில் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.