மலேஷிய உட்பட வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெறும் மோசடிக்கும்பள்களிடம் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு மலேஷியாவில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றிய இருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மலேஷியாவில் தொழில்பெற்றுத் தருவதாக கூறி ரூபா 80,000 வீதம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்து 22 பேர் இலங்கை வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து பணியகத்திற்குள் சுற்றிவளைப்பு பிரிவு மற்றும் நிட்டம்புவ பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 10 கடவுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான மோசடிக்காரர்கள் நாடு முழுவதும பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் பணியகம் அறிவிப்பு விடுத்துள்ளது.