சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று பின் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர் ஒருவரை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கைதுசெய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.