கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வன்னேரிக்குளம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களில் கிளிநொச்சி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (14) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
மேற்படி இரு கிராமங்களிலும் மணல் கடத்தல் இடம்பெறுகின்றது என பொலிஸாருக்கு நீண்டகாலமாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.