மின்வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு : ஜனாதிபதி உத்தரவு

மின் வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேசிய மின் கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மின் விநியோகிக்கும் சகல நிலையங்களுக்கும் இராணுவத்தினர் மூலம் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நேற்றைய தினம் நாட்டின் சகல பகுதிகளுக்குமான மின் விநியோகம் தடைப்பட்டதோடு இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

நேற்றைய மின் தடைக்கான காரணம் சூழ்ச்சியாக இருக்கும் என நம்பப்படும் இதேவேளை ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts