இராணுவ ரக் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை (14) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் – மன்னார் (ஏ -32) வீதியில் பூநகரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பூநகரி 4ஆம் கட்டைச் சேர்ந்த கனகேந்திரன் ரஜின்குமார் (வயது 32) என்பவர் படுகாயமடைந்தார்.
சைக்கிளில் இறங்குதுறைக்குச் சென்றுகொண்டிருந்த இவரை இராணுவ ரக் வண்டி மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.