உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்தாலும் இலங்கையில் அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அதற்குக் காரணம், பெற்றோலிய வளத்துறை அமைச்சு பாரிய தொகை கடன் செலுத்த வேண்டியிருப்பதே என்று அமைச்சர் கூறியுள்ளார்.
பெற்றோல் விலையை குறைப்பதற்கு பதிலாக கடன் சுமையிலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அமைச்சர் கூறியிருந்தார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் அதன் பிரதிபலனை இந்நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான முறை ஒன்றை கையாள இருப்பதாக அரசாங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.