Ad Widget

T20 சுற்றுப்போட்டிக்கான தேர்வு தொடர்பில் நான் கவலைக்கொள்கின்றேன்- யாழில் ரணதுங்க

இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகளின் பொருட்டு அணியை தேர்வுச் செய்த முறை தொடர்பாக தான் கவலை கொள்வதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாகிய அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.

ranathunga

இந்நாட்டில் வழமைக்கு மாறான முறையில் அணி தேர்வு இடம்பெற்றுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார். கிரிக்கெட் போட்டி தொடர்பாக போதிய அறிவற்ற நிர்ருவாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டவுடன் இவ்வாறான பிரச்சினைகளிற்கு முகங்கொடுக்க நேரிடுகின்றதென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் இக்கருத்தினை யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் புனித யோவான் கல்லூரிகளுக்கிடையே நேற்று காலை (10)ஆரம்பமாகிய கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் வெளியிட்டார். இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி யாழ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.

‘ உலக சுற்றுப்போட்டிக்கான தேர்வு தொடர்பில் நான் கவலைக்கொள்கின்றேன். இந்நாட்டில் வழமைக்கு மாறான முறையிலேயே தேர்வு இடம்பெற்றுள்ளது. இக்கணம் நாங்கள் எம் அணி மீண்டுமொருமுறை உலக கிண்ணத்தை வெற்றிக்கொள்ளும் பொருட்டு வாழ்த்துக்களை தெரிவிப்போம். அதன் பின்னர் நிகழ்ந்துள்ள பிழைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்போம்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாவண்ணம் தடுப்பதே முக்கியமாகும். ஒரு போதும் வீரர்களுக்கு அநீதியிழைக்கக் கூடாது. கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக போதிய அறிவற்ற நிர்ருவாகிகள் நியமிக்கப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக நாம் போதிய அவதானம் செலுத்த வேண்டுமென …’ அமைச்சர் அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார்.

Related Posts