புதிதாக பதவிஏற்றுள்ள யாழ் கட்டளைத்தளபதி ஏற்பாட்டில் மகா சிவராத்திரிக்காக கோயில் துப்பரவு செயற்பாடுகளும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கும் பணியும் இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக, தமது படை வீரர்களைக் கொண்டு குடாநாட்டில் உள்ள முக்கிய ஆலயங்கள், உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை புனிதமாக்கும் பணிகளில் ஈடுபட வைத்துள்ளார்.
இந்துக்களின் புனித தினமான மகாசிவராத்திரிக்காக கட்டளைத் தளபதியின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் அதனை சூழவும் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் வெளிப்பிரதேசங்கள் பாதுகாப்புப் படையினரால் துப்பரவு செய்யப்பட்டன. அத்துடன் இன்று சிவராத்திரி தினத்தன்று தாகசாந்தி நிலையங்கள் அமைத்து கோப்பிவழங்குதல் தண்ணீர் வழங்குதல் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. பக்தர்கள் அவற்றினை விசித்திரமாக பார்த்து செல்கின்றனர்.