பொலிஸ் நிலையங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இரகிசய தகவல்களை திரட்டும் புலனாய்வுப்பிரிவினை மீண்டும் இயங்கச் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் போலியான வர்த்தக நடவடிக்கைகளை இரகசியமாக வேவு பார்ப்பதற்கு இந்த குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த அரசாங்கத்தினால் இரகிசய பிரிவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட பிரிவின் அதிகாரங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கும், முப்படை புலனாய்வு பிரிவு, மற்றும் அரச புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றிற்கும் வழங்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற கொலைகள் மற்றும் பாதாள குழுக்களின் நடவடிக்கைகள் என்பவற்றை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த இரகசிய புலனாய்வுப் பிரிவை மீள செயற்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்