இரத்திரிபுரி மாவட்டத்தில் நிலஅதிர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் நேற்று விடியற்காலை 3.15மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்கொடை நகரை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பல்லேகலையில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மையத்தின் கட்டமைப்பில் சிறிய அளவிலான அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க ஆழப்படுத்தல் பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நில அதிர்வு காரணமாக எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளை தொடக்கியுள்ளது.

Related Posts