காதலர்களை விரட்டிய பாதுகாப்பு ஊழியர்கள் – நிறுவனத்துக்கு சிக்கல்

சுதந்திர சதுக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, அரசசார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கலாச்சார அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் சுதந்திர சதுக்கத்தில் காதலர்கள் இருவர் அமர்ந்திருந்தபோது, பாதுகாப்பு கடமைகளில் இருந்தவர்கள் அவர்களை வௌியேற்றியுள்ளனர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவின. இதனையடுத்து, அமைதியான முறையில் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்தே பிரதமரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமரின் இந்த உத்தரவு குறித்து பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது பேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts