இன்று முதல் கொழும்பில் விஷேட சோதனை நடவடிக்கைகள்

அண்மைய நாட்களாக தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையின் கீ்ழ் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 102 தொலைபேசி வீதித் தடைகள் ஏற்படுத்தி ஆட்கள் மற்றும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நடவடிக்கைகள் 03 மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஒவ்வொரு நடவடிக்கைகளினதும் அறிக்கைகள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்படவுள்ளது.

இது தவிர கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10 இடங்களில் 10 தொலைபேசி பிரிவுகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 08 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுவதுடன், அது அந்தப் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.

ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்றால், குறித்த தொலைபேசி பிரிவை கண்காணிக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு அந்த இடத்திற்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை அழைப்பதற்கு முடியும்.

அண்மைய தினங்களில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாகியிருந்ததுடன், இவற்றுக்கு பாதாள உலக குழுக்கள் சம்பந்தப்படிருப்பது தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாக அமைதியாக இருந்த பாதாள உலக குழுவினர் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதாள உலக குழுவினர் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என்று மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அத தெரணவிடம் தெரிவித்தார்.

Related Posts