Ad Widget

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்.மைந்தன்!

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

cricket-jaffna-boy-sajeepan

விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும், 2 ரி-20 போட்டியிலும் விளையாட ரியூடர், சஞ்சீவன் ஆகிய இருவரும் மலேசியா பயணமாகின்றனர்.

யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்காக விளையாடிய ரியூடர் மற்றும் மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரிக்காக விளையாடிய சஞ்ஜீவன் ஆகியோர் கடந்த காலங்களில் சிங்கப்பூர் சென்ற யுனிற்றி அணியில் விளையாட தெரிவு செய்யப்பட்டனர்.

இதனால் முன்னணி கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் கவனத்திற்கு வந்தனர். இவர்கள் உண்மையில் திறன் வாய்ந்தவர்கள். இவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என வட பிராந்திய பயிற்றுவிப்பாளர் ரவீந்திர புஷ்பகுமார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாம் சிங்கப்பூர் சென்றபோது விக்கெட் காப்பாளராக றிஷாந் ரியூடர் இருந்தபோது முரளி பந்து வீசினார். முரளியின் தூஸ்றாக்களை அவர் இலகுவாக பிடித்த விதத்தினை முரளியும் சங்கக்காரவும் பாராட்டினர் என அவர் குறிப்பிட்டார்.

Related Posts