இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது – வயது கட்டுப்பாடும் திருத்தப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கத்தினால் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் செய்த வேண்டுகோளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் 2016 மார்ச்சு மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி வரை விண்ணயப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரச சேவை ஆணைக் குழுவின் அனுமதியுடன் இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, இதற்கு முன்னர் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவை பரீட்சைக்குத் தோற்றிய தடவைகள் பற்றி கணக்கில் எடுக்காததுடன், புதிய பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவைகள் தோன்ற முடியும்.
அவ்வாறே, வயது அளவும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வேண்டுகோளின்படி திருத்தப்பட்டுள்ளது. அதற்கு அமைய திறந்த போட்டிப் பரீட்சைக்கு உச்ச வயது வரம்பு 30 இல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு உச்ச வயது வரம்பு 55 இல் இருந்து 58 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி இதுவரை பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற இளம் வயதினரும், ஆசிரிய சேவையின் பெருந்தொகையினரும், அதிபர் சேவை 1 ஆம் தரத்தில் 58 வயதுவரையுள்ள பெரும்பாலோரும்பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கல்வி அமைச்சரால் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்பு தொடர்பில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கம் உட்பட கல்விப் புலத்தின் அனைத்துதொழிற் சங்கங்களும் கல்வி அமைச்சருக்குத் தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளன
இது கல்வி அமைச்சின் இணைய தளத்தில் காணப்படும் செய்தி என்பதோடு வர்த்தமானியில் இன்னும் பிரசுரிக்க படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.