மூதுார் சிறுவனின் கொலையில் திருப்பம்! கைதான சிறுவனின் புதிய வாக்குமூலம்

திருகோணமலை சம்பூரில் கல்லில் கட்டப்பட்ட நிலையில் சிறுவனொருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறுவன் தான் குற்றமிழைக்கவில்லை என நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இந்த கொலையுடன் ஏனைய இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களே குற்றத்தை ஒப்புக் கொள்ள கூறியதாகவும் சந்தேகபரான சிறுவன் நீதவானிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான வழங்கு விசாரணை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

சந்தேகநபரான சிறுவனின் வாக்கு மூலத்தை அடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சந்தேகநபரான சிறுவனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய ஐ.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் ஏழாம் வட்டாரம் பகுதியில் வசித்த ஆறு வயதான குகதாஸ் தர்சன் என்ற சிறுவன் ஜனவரி 25 ஆம் திகதி மாலை காணாமல்போன நிலையில் அன்றிரவு பாழடைந்த கிணற்றிலிருந்து கல்லில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மூதூர் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசாரணைக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து உயிரிழந்த சிறுவனின் மைத்துனனான 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts