சிறுமிக்கு தவறான சிகிச்சை – சுகாதார அமைச்சு விஷேட விசாரணை

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் வலது காலில் செய்ய வேண்டிய சத்திரசிகிச்சையை இடது காலில் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபாலவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ஒருவர் வலது காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த முதலாம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர், வலது காலுக்கு பதிலாக இடது காலில் சிகிச்சையை செய்துள்ளதாக பெற்றோர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பில் பெற்றோரால் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இந்தவிடயம் குறித்து விஷேட விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் தீர்மானித்தார்.

இதன்பிரகாரம் பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts