கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் பாரிய உணவுக் களஞ்சியமொன்று அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பபாளர் அ.கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்டத்தில் இபாட் திட்டத்தின் கீழ் மூன்று நெற்களஞ்சியங்கள் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பாரிய உணவுக் களஞ்சியம் ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அமைப்பதற்கான நிதியாக நிதியமைச்சரிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வது பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. போதிய களஞ்சிய வகைகள் இன்மையே இதற்கு பிரதான காரணமாகும். எனவே இவற்றினை கருத்தில் கொண்டு இவ் களஞ்சிய சாலை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.