Ad Widget

கண்டாவளையில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள 88 ஏக்கர் காணிகளையும் சுவீகரிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாக கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்தார்.

கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம், தர்மபுரம் நெசவுச்சாலை மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. இதன்போதே, மேற்படி விடயத்தை பிரதேச செயலார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

தங்கள் வசமுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டுதல், பிரதேச செயலகத்துக்கு விண்ணப்பங்கள் வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.

கோரக்கன்கட்டு வை.எம்.சி.ஏ காணி, வெலிக்கண்டல் சந்தியிலுள்ள காணி, புளியம்பொக்ககனைச் சந்தியிலுள்ள காணிகள் மற்றும் தனியார் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் காணிகள் என்பன இதில் அடங்குகின்றன என்றார்.

இதேவேளை, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 953 குடும்பங்கள் காணியில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Posts